Advertisement

ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!

ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 07, 2021 • 18:24 PM
ICC Men's ODI & T20 Player Rankings:KL Rahul moves no 6
ICC Men's ODI & T20 Player Rankings:KL Rahul moves no 6 (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிற்கான வீரர்கள் தவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த டேவிட் மலான் 888 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் (830), பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (828), நியூசிலாந்தின் டெவான் கான்வே (774) ஆகியோர் உள்ளனர். 

Trending


இதைத் தொடர்ந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி (762) தொடர்ந்து 5ஆவது இடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்ததாக தொடக்க வீரர் கே.எல். ராகுல் 743 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இந்திய அணியிலிருந்து முதல் 10 இடங்களில் ராகுல் மற்றும் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதேசமயம் பந்துவீச்சில் ஒரு இந்தியர்கூட முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே முதல் 5 இடங்களில் உள்ளனர். இருவரும் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய அணியிலிருந்து ஜாஸ்பிரீத் பூம்ரா மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 9ஆவது இடத்தில் உள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதன்முறையாக 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement