ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது நாளை அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - நரேந்திர மோடி மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - மதியம் 2 மணி (GMT)
போட்டி முன்னோட்டம்
பாட் கமமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் ஆகியோர் டாப் ஆர்டரில் அதிரடியாக ரன்களை சேர்க்க தயாராக இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் ஏமாற்றத்தை கொடுத்தால் நங்கூரத்தை போடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் கிளாஸ் பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரை அலங்கரிக்கும் நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அடித்து நொறுக்கி தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஃபினிஷராக இருக்கிறார்.
இருப்பினும் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஸ் சற்று தடுமாற்றமான ஃபார்மில் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் இல்லாத குறையை மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகிய பேட்ஸ்மேன்கள் பார்த்துக்கொள்ள தயாராக இருக்கின்றனர். அதே போல ஆடம் ஸாம்பா சமீபத்திய போட்டிகளில் இந்திய பேட்ஸ்மன்களுக்கு சவாலை கொடுத்த தரமான ஸ்பின்னராக இருக்கிறார். அவர்களுடன் கேப்டன் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் அனுபவமிகுந்த வேகப்பந்து வீச்சார்களாக மிரட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
மறுபுறம் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கும் நிலையில் அவருக்கு நிகராக சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை காட்டி வருகிறார். அவர்களுக்கு நிகராக தேவைப்பட்டால் அதிரடியாகவும் நங்கூரமாகவும் விளையாடும் தன்மை கொண்ட உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று நம்பலாம்.
அவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் மிடில் ஆர்டரை வலுப்படுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 3 துறைகளிலும் அசத்தி இந்தியாவை எப்போதும் ஏமாற்றாத ஆல் ரவுண்டராக அசத்துதற்கு தயாராக உள்ளார். இவர்களை விட ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வேகத்தில் தெறிக்க விடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
பொதுவாக அன்றைய நாளில் யார் நல்ல ஃபார்மில் அசத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பார்கள். மொத்தத்தில் இரு அணிகளுமே சம பலத்தைக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் அசத்தும் தன்மையை இரு அணிகளும் இயற்கையாகவே கொண்டுள்ளதால் இரு அணிக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது.
வெதர் ரிப்போர்ட்
நாளை அஹ்மதாபாத் நகரில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்
அஹ்மதாபாத் மைதானம் வரலாற்றில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் புதுப்பிக்கப்பட்ட இம்மைதானத்தில் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு கருமண்ணால் செய்யப்பட்ட பிட்ச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இங்கு வரலாற்றில் நடைபெற்ற 32 போட்டிகளில் 17 முறை பேட்டிங் செய்த அணியும் 15 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே இப்போட்டில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 150
- ஆஸ்திரேலியா - 83
- இந்தியா - 57
- முடிவில்லை - 10
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: கேஎல் ராகுல்
- பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிராவிஸ் ஹெட் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஷுப்மான் கில்
- ஆல்ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல்
- பந்துவீச்சாளர்கள்: முகமது ஷமி, பாட் கம்மின்ஸ்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now