ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
தென் ஆப்பிரிக்க நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வீறுநடை போட்டு வருகிறது. எதிர்கொண்ட ஐந்து ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் என நான்கு அணிகளை துவசம் செய்து புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கடைசியாக 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் பலமாக காணப்படுகிறது.
தொடக்க வீரர் குயின்டன் டி காக் நடப்பு சீசனில் இதுவரை 3 சதங்களை விளாசி முழு உடற்தகுதியில் உள்ளார். தொடக்க வீரர் குயின்டன் டி காக்கை கட்டுப்படுத்தினால் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களால் ஜொலிக்க முடியும். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ராம், ஹென்ரிச் கிளெசன், ரீஸா ஹெண்ட்ரீஸ் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகின்றனர். மேலும் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த கேப்டன் டெம்பா பவுமா நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இரண்டு வெற்றி 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்கிற நிர்பந்தத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷாகீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஷதாப் கான் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிவேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வருவது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தவறுகளை திருத்தி பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக்கட்ட ஓவர்களில் சூழ்நிலைகளை புரிந்து நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஆனால் மேலும் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி சேசிங் செய்வதற்கு சமமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 82
- தென் ஆப்பிரிக்கா - 51
- பாகிஸ்தான் - 30
- முடிவில்லை - 01
உத்தேச லெவன்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபீக், ஃபகர் ஸமான், பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப்
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: குயின்டன் டி காக் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள்: பாபர் ஆசாம், டெம்பா பவுமா
- ஆல்-ரவுண்டர்: ஐடன் மார்க்ரம், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், மார்கோ ஜான்சென்
- பந்துவீச்சாளர்கள்: ஜெரால்ட் கோட்ஸி, ஷஹீன் அஃப்ரிடி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now