
ICC Player of Month: Sikandar Raza, Tahila Mcgrath win for August (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயர்களை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.