
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் மோதின. பெரும் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணம், விராட் கோலி எனும் தனி நபர் போராட்டம் தான். ஒற்றை ஆளாக களத்தில் தூண் போல நின்ற விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசினார். குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் அவர் காட்டிய அதிரடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இந்நிலையில் அந்த ஒரு போட்டியில் கோலி காட்டிய அதிரடி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15ஆவது இடத்தில் இருந்த விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.