ஐசிசி தரவரிசை: 40ஆவது வயதில் முதலிடத்தைப் பிடித்து ஆண்டர்சன் சாதனை!
சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்து சாதானைப் படைத்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 87 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
Trending
இதன் மூலம் 40 வயது 207 நாட்களில் முதலிடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் கிளாரி கிரிம்மெட் 1936 ஆம் ஆண்டு படைத்திருந்த சாதனையை ஆண்டர்சன் தற்போது முறியடித்துள்ளார்.
ஆண்டர்சன் தற்போது 866 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆண்டர்சன் இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு முதல் இடத்தில் இருந்தார். அப்போது ஐந்து மாதங்கள் அந்த இடத்தில் நீடித்த போது தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவிடம் தனது இடத்தை இழந்தார்.
தற்போது ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 682 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்களுடன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.டெல்லி டெஸ்டில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் 864 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஆண்டர்சனுக்கும் அஸ்வினுக்கும் வெறும் 2 புள்ளிகள் மட்டும் தான் வித்தியாசம் உள்ளது. இதனால் அஸ்வின் முதலிடம் பிடித்த நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலிடத்தில் நீடித்திருந்த ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாட் கம்மின்ஸ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் அவர் 1466 நாட்களுக்குப் பிறகு தன்னுடைய முதல் இடத்தை இழந்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now