Advertisement

ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!

இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போல இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் அவசரப்பட்டு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானதே தோல்வியின் முதல் படியாக அமைந்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 20, 2023 • 12:38 PM
ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்!
ரோஹித் இந்த தவறை செய்திருக்க கூடாது - வீரேந்திர சேவாக்! (Image Source: Google)
Advertisement

பொரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. குறிப்பாக லீக் மற்றும் அரையிறுதியில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று மிரட்டிய இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் சுமாராக பேட்டிங் செய்து 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 137, லபுஷாக்னே 58 ரன்கள் எடுத்து 6ஆவது கோப்பையை வென்று சாதனை படைக்க உதவினார்கள். அந்த வகையில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை இம்முறையாவது சொந்த மண்ணில் இந்தியா நிறுத்தும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் வேதனையுமே பரிசாக கிடைத்தது.

Trending


முன்னதாக இப்போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 47 ரன்கள் எடுத்த போதிலும் எஞ்சிய வீரர்கள் பிட்ச் மெதுவாக இருந்ததால் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போல இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் அவசரப்பட்டு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானதே தோல்வியின் முதல் படியாக அமைந்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி தேவையான பவுண்டரிகளை அடித்த ரோஹித் சர்மா கண்மூடித்தனமாக அடிக்காமல் சற்று நிதானத்தை காட்டியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், “ரோஹித் இதற்காக ஏமாற்றமாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் அணி நிர்வாகம் கண்டிப்பாக ஏமாற்றத்தை சந்தித்திருக்கும்.

குறிப்பாக நீங்கள் ஏற்கனவே ஒரு ஓவரில் 6 அல்லது 4 அடித்த பின் அந்த ஷாட்டை அடித்திருக்கக் கூடாது என்று அணி நிர்வாகம் அவரிடம் சொல்லியிருப்பார்கள். இருப்பினும் அது பவர்ஃபிளே ஓவரின் கடைசி ஓவர் என்பதால் மேக்ஸ்வெலை விடக்கூடாது என்று ரோஹித் சர்மா அடிக்க சென்றார். ஆனால் அது மோசமான ஷாட் என்பதில் சந்தேகமில்லை. 

ஒருவேளை அந்த சமயத்தில் அவர் சற்று நிதானமாக விளையாடியிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். ஏனெனில் ரோஹித் சர்மா அவுட்டானதும் பிட்ச் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. திடீரென்று உங்களால் அதில் அதிரடியாகவும் அடிக்க முடியவில்லை சிங்கிள்களும் எளிதாக எடுக்க முடியவில்லை என்பது போல் மோசமான நிலைமை உருவானது” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement