பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக மிகச் சிறப்பாக விளையாடியும் இந்தியா கோப்பையை வெல்லத் தவறியதால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி பற்றி தற்போது கேள்வி எழுந்துள்ளது. அதே போலவே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவி காலமும் உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது.
கடந்த 2016 முதல் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் என்சிஏவில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த அவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரி தனது பதவியிலிருந்து விலகியதும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த பொறுப்பில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்கள் செய்ததை வழக்கமாக வைத்திருந்த நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை ஆகிய 4 முக்கியமான தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
Trending
இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் 2023 உலகக் கோப்பையுடன் பதவி காலம் நிறைவுக்கு வருவதால் மேற்கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வேண்டாம் என்ற கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அதன்பின்னும் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரை ராகுல் டிராவிட்டே பயிற்சியாளராக தொடர்வார் என்று பிசிசிஐ அறிவித்திருந்தாது. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர்களுக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Rahul Dravid can re-apply for the role! pic.twitter.com/i0cA2qlcOX
— CRICKETNMORE (@cricketnmore) May 10, 2024
அதன்படி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பினால் அவரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பதவிக்கு இந்தியர்களை தவிர்த்து வெளிநாட்டு பயிற்சியாளர்களும் விண்ணபிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now