
சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் இடம் பெற்றுள்ளார். இருந்தாலும் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் அங்கம் வகிக்கவில்லை.
அதுகுறித்து கிரிக்கெட் வல்லுநர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கம்பேக் குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தடைகளை தகர்த்து, செயல்பாட்டை முன்வைத்து எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அணிக்கு வேண்டிய வகையில் சிறந்த முறையில் எனது பங்களிப்பை வழங்க முயற்சிப்பேன். இப்போது அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தடைகளை தகர்த்து, செயல்பாட்டை முன்வைத்து எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விரும்புகிறேன்.