Advertisement

இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸி தொடரை வெல்லும் - இயன் ஹீலி!

டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். 

Advertisement
 'If India produces fair Indian wickets; Australia would win' - Ian Healy
'If India produces fair Indian wickets; Australia would win' - Ian Healy (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 02, 2023 • 10:06 PM

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்விளையாட உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 02, 2023 • 10:06 PM

இந்நிலையில்,எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “வழக்கமாக இந்திய ஆடுகளங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்கத்தில் பேட்டிங் செய்ய உதவும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுழலுக்கு சாதகமாக விக்கெட் மாறும். அது போன்ற ஆடுகளம் நியாயமான முறையில் அமைக்கப்பட்டால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்.

மேலும், கடந்த தொடரை வைத்து பார்க்கும் போது ஸ்டார்க் மற்றும் நாதன் லியோனை எண்ணி எனக்கு கொஞ்சம் கவலையாக உள்ளது. ஏனெனில் அங்கு ஆடுகளம் கணிக்கமுடியாத அளவுக்கு பந்துகளை கொண்டு செல்கிறது. இது மாதிரியான சூழலை இந்தியா திறம்பட கையாளும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இந்த தொடரில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாடும் வாய்ப்பை பெற முடியும். ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அது தவிர இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை ஆஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2004ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement