
வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் உலகம் முழுவதிலும் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
இந்நிலையில், இம்முறை நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எப்படியாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்து விட்டால் எஞ்சிய வெற்றியை நேதன் லயன் தன்னுடைய அனுபவத்தால் வசமாக்கி விடுவார் என்று முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நியாயமான முறையில் சுழல் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு சில முறை ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை குவித்தால் அது இந்தியா மீது ஆரம்பத்திலேயே அழுத்தத்தை திருப்பிப் போடும். இத்தொடருக்காக ஆஸ்திரேலியர்கள் 4 ஸ்பின்னர்களை அழைத்துச் சென்றுள்ளார்கள். அதில் நேதன் லயனுடைய தரத்தையும் அனுபவத்தையும் சாதனைகளையும் இந்தியர்கள் நிச்சயமாக மதிப்பார்கள்.