
இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் முக்கிய வீரர் ஒருவர் வழக்கம் போல தன் அதிரடி ஆட்டத்தை ஆடினால் நிச்சயம் இந்தியா தான் வெற்றி பெறும் என கூறி இருக்கிறார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய அணியும், நான்காம் இடம் பெற்ற நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. என்ன தான் நியூசிலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் வெற்றி - தோல்விகளை மாறி மாறி பெற்று இருந்தாலும், 2019 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்திய அணியை வீழ்த்தி இருப்பதை பலரும் நினைவு கூர்ந்து, இந்திய அணி ஏதோ பலவீனமாக இருப்பது போல பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக், நியூசிலாந்து அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகும் இந்திய வீரர் ரோஹித் சர்மா தான் எனக் கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 503 ரன்கள் குவித்துள்ளார். அதில் முக்கியமான விஷயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 121 என்பது தான்.