Advertisement
Advertisement
Advertisement

ஐஎல்டி20: பாவெல், ரூட் அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!

எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan January 23, 2023 • 11:33 AM
ILT20: Rovman Powell, Joe Root Power Dubai Capitals To 16-run Victory
ILT20: Rovman Powell, Joe Root Power Dubai Capitals To 16-run Victory (Image Source: Google)
Advertisement

துபாயில் தற்போது சர்வதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ், எம்ஐ எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க ராபின் உத்தப்பா 26 ரன்களை மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜோ ரூட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். மறுபக்கம் ஒன்டவுன் பேட்டர் ரௌமேன் பௌலும் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்ததால், அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.

Trending


இறுதியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்து அசத்தியது. இதில் அதிரடியாக விளையாடிய ரூட் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை குவித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரோவ்ன் பாவெல் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உட்பட 97 ரன்களை சேர்த்தார்.

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் வில் ஸ்மித் 13, முகமது வசீம் 10 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து நிகோலஸ் பூரன் டக் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார். அடுத்து ஆண்ட்ரே ஃபிளட்சர் 35, கேப்டன் கீரென் பொல்லார்ட் 86, நஜிபுல்லா ஸத்ரான் 30, சமித் படேல் 18 ஆகியோர் அதிரடியாக விளையாடியும், எம்ஐ எமிரேட்ஸ் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து  206 ரன்களை மட்டும் சேர்த்தது.

இதன்மூலம், துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ரோவ்மன் பாவேல் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

மேலும் சமீபத்தில் சட்டேஷ்வர் புஜாரா, இங்கிலாந்து ஒருநாள் கவுண்டி தொடரில் பங்கேற்று தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி அதிரடி ஃபார்மை நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியிலும் ஓரளவுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். அதேபோல், பிக்பாஸ் லீக் தொடரில் ஸ்டீச் ஸ்மித் தொடர்ந்து காட்டடி அடித்து, தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசி டி20 கிரிக்கெட்டில் முரட்டு ஃபார்மில் இருக்கிறார்.

அதேபோல் தற்போது, ஜோ ரூட்டும் அதிரடியாக விளையாடி அசத்தியிருக்கிறார். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தாலும், ரூட் மட்டும் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது, ரூட்டும் அதிரடி காட்டியிருப்பதால், இனி இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அனைவரும் அதிரடியாக விளையாட வாய்ப்புகள் இருக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement