
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மிக மோசமாக செயல்பட்டு இருக்கிறது. அந்த இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளை தோற்று அரை இறுதி வாய்ப்பை விட்டு வெளியேறியிருக்கிறது. ஆனாலும் கூட இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு வழக்கமான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.
உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு அடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்க செய்கிறது. உலகத்தில் பெரிய அளவில் முதலில் கிரிக்கெட் விளையாடிய இரு நாடுகள் என்கின்ற காரணத்தினாலும், வரலாற்று ரீதியாக இந்த இரு அணிகளுக்கும் இடையே உள்ள பழைய கிரிக்கெட் வரலாறுகளாலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் ஆறு போட்டிகளில் கடைசி நான்கு போட்டிகளை வென்று தற்பொழுது அரையிறுதி வாய்ப்பில் இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு பின்னடைவாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கோல்ப் விளையாட்டில் தலையில் காயப்பட்டு உள்ள மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் திடீரென சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொண்டு வந்திருக்கிறது.