
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரைஸ் மாரியூ அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அவர் 58 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெலும் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 37 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 33 மற்றும் தயப் தாஹிர் தலா 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 221 ரனகளில் ஆல் அவுட்டானது.