
Imam-ul-Haq named in Pak squad for Bangladesh Tests (Image Source: Google)
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெறும் டி20 தொடரானது 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 26ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ஏற்கெனவே டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.