
Imran Khan shares special message for Babar Azam & Co. during PAK vs NZ WC semis (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் வாழ்வா? சாவா? அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் பாபர் ஆசாம், முகம்மது ரிஸ்வான் ஜோடி 3ஆவது பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியை வெகுவாக பாராட்டியுள்ளார் 1992 உலக கோப்பை கேப்டன் இம்ரான் கான்.