
தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக இந்திய அணி., டி20 தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளித்துவிட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தும், அவரை கேப்டனாக அறிவித்தும் அவருடைய தலைமையின் கீழ் இளம் வீரர்களை விளையாட வைத்தும் வருகிறது.
பிசிசிஐ-யின் இந்த செயல் டி20 தொடருக்கான அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை முன்னிறுத்துவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், ரோஹித் சர்மாவிற்கு பிறகு மற்ற தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்து வருகிறது.
மற்ற அணிகள் ஸ்பிலிட் கேப்டன்சி என்று ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டனை நியமித்திருக்கும் வழக்கம் இருந்தாலும், இந்திய அணி அனைத்து விதமான தொடருக்கும் ஒரே கேப்டனின் கீழ் செயல்படும் முறையை ஃபாலோ செய்து வருவதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.