
IND A vs AUS A 1st Test: இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று லக்னோவில் தொட்ங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.
மற்றொரு தொடக்க வீரரான காம்பெல் கெல்லவேவும் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களைச் சேர்த்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை லியாம் ஸ்காட் 47 ரன்களுட்னும், ஜோஷ் பிலீப் 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் லியாம் ஸ்காட் 81 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஜோஷ் பிலீப் சதமடித்து அசத்தியதுடன் 18 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 532 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.