
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்ச் துவக்கத்தில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், ஸ்பின்னர்கள்தான் இப்போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே துவக்கத்தில் பட்டையக் கிளப்பி அசத்தினார்கள்.
முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பந்துவீசினார்கள். பிட்சில் பவுன்ஸ் இல்லாமல் இருந்தது. இதனால், பந்துகளை மேலே ஏத்திப்போட வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில், அதற்கேற்றாற்போல், சிராஜ் பந்தை துவக்கத்திலேயே மேலே ஏத்திப்போட்டு, கவாஜாவுக்கு இன் ஸ்விங் வீசினார்.
இதனைக் கணிக்க தவறிய கவாஜா 1 சிராஜின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 1 ஷமி பந்தை தவறாக கணித்து போல்ட் ஆனார். இதனால், ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸி அணி 2 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது.