இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, நாக்பூர், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 4 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பெங்களூருவில் பயிற்சி முகாம் அமைத்தது ஏன் என்று பலரும் யோசித்து வந்தனர். அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
பெங்களூருவை அடுத்த ஆலுர் என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஆடுகளங்கள் அனைத்தும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். இந்திய வீரர்கள் யாராவது சுழற்பந்துவீச்சுக்கு தயாராக வேண்டும் என்றால், இங்கு வந்து தான் பயிற்சி செய்வார்களாம். ஆர்சிபி அணி நிர்வாகமும், இங்கு பலமுறை பயிற்சி செய்து இருக்கிறார்கள்.
இந்த ரகசியத்தை ஆர்சிபி மூலம் தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள், எங்களுக்கு பெங்களூருவில் இந்த மைதானம் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தை தவிர எந்த ஒரு வீரரும் டெஸ்ட் போட்டியில் 30க்கு மேல் சராசரி வைத்தது இல்லை.