
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.
தாக்காவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷபாஸ் அகமது, குல்தீப் சென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் (11), லிட்டன் தாஸ் (7) ஆகிய இருவரையும் சிராஜ் வீழ்த்த, 3ஆம் வரிசையில் இறங்கிய நஜ்முல் ஹுசைனை (21) உம்ரான் மாலிக் வீழ்த்தினார். ஷகிப் அல் ஹசன் (8), முஷ்ஃபிகுர் ரஹிம் (12), அஃபிஃப் ஹுசைன்(0) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த,19 ஓவரில் 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி.