Advertisement

IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 14, 2024 • 13:51 PM
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒல்லி போப்பின் அபாரமான ஆட்டத்தின் மூலம் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பும்ராவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயாயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சி மேற்கொண்ட நிலையில் சில தினங்களுக்கு முன் இந்தியா வந்தடைந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் ராஜ்கோட்டில் தங்களது பயிற்சியைத் தொடரவுள்ளனர்.

Trending


இந்நிலையில் நாளை நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணியில் சோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இப்போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்துள்ளனர். 

மேலும் இது பென் ஸ்டோக்ஸ் விளையாடும் 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் இரண்டாவது போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோருடன் ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோரும் எவ்வாறு செயல்படுவார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement