Advertisement

டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் டிராவிட்!

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷிவம் மாவி, அக்ஸர் படேல் ஆகியோரை பயிற்சியாளர் ஆகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.

Advertisement
IND V SL: Dravid Seeks Patience And Understanding For Young Players, Says They Will Have Off-days
IND V SL: Dravid Seeks Patience And Understanding For Young Players, Says They Will Have Off-days (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 06, 2023 • 10:57 AM

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 206 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த அக்சர் பட்டேல், சூரிய குமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 06, 2023 • 10:57 AM

6 சிக்ஸர் விளாசிய அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். சூரியகுமார் யாதவ் தன் பங்குக்கு அரை சதம் அடிக்க சிவம் மவி 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இருந்தும் இந்த போட்டிகள் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

Trending

இந்நிலையில் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் , “டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் இப்போது ஹர்திக் பாண்டியாவை மட்டுமே நம்பி இருக்கிறோம். சிவம் மவி போன்ற வீரர்கள் இப்படி விளையாடும் போது உங்கள் முகத்தில் மகிழ்ச்சியில் சிரிப்பு வந்துவிடும். அக்சர்பட்டேல் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். 

அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பேட்டிங்கில் தற்போது நன்றாக விளையாடி வருகிறார். ஜடேஜா தற்போது இல்லாத நிலையில் அக்சர் பட்டேல், தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார். பேட்டிங்கில் அக்சர் தனி பயிற்சி எடுத்து வருகிறார். அக்சர் பட்டேல் இதுவரை பேட்டிங்கில் எங்களை காப்பாற்றாமல் இருந்தது இல்லை.

இதேபோன்று ராகுல் திரிபாதி  இந்திய அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மற்ற வீரர்களை போல கிடையாது. ஆனால் அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடிய நிறைய அனுபவங்கள் இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தான் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement