Advertisement

IND vs AUS, 1st Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல அவுட்டானது.

Advertisement
IND vs AUS 1st Test: Jadeja Picks 5-Fer As India Bowl Out Australia For 177 In 1st Innings
IND vs AUS 1st Test: Jadeja Picks 5-Fer As India Bowl Out Australia For 177 In 1st Innings (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 09, 2023 • 02:55 PM

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 09, 2023 • 02:55 PM

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் இன்னிங்ஸின் 2ஆவது ஓவரில் உஸ்மான் கவாஜாவை ஒரு ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார் முகமது சிராஜ். அதற்கடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்து ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஷமி.2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Trending

முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில், அதன்பின்னர் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் ஸ்மித் - லபுஷேன் ஜோடி ஆடியது. உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் அடித்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்த 4வது ஓவரில் மார்னஸ் லபுஷேனை அபாரமான சுழலின் மூலம் ஜடேஜா வீழ்த்தினார். 

பந்து நன்றாக சுழன்று திரும்ப, அதை அடிக்க ஃப்ரண்ட்ஃபூட்டில் முன்பாக நகர்ந்துவந்த லபுஷேன், க்ரீஸுக்கு திரும்புவதற்குள் கேஎஸ் பரத் அவரை ஸ்டம்பிங் செய்தார். அதற்கடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவை வீழ்த்தினார் ஜடேஜா. 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார் ஸ்மித்.

நன்றாக விளையாடி அக்ஸர் படேலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கி 37 ரன்களுக்கு வீழ்த்தினார் ஜடேஜா. அதன்பின் அஸ்வினும் தனது பங்கிற்கு 36 ரன்களைச் சேர்த்திருந்த அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தினார். அவரைத்தொடர்ந்து வந்த பாட் கம்மின்ஸும் அஸ்வின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த டார் மர்ஃபியை ஜடேஜாவும், காட் போலண்டின் விக்கெட்டை அஸ்வினும் வீழ்த்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement