Advertisement

மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்?

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் பாட் கம்மின்ஸ் இருக்க மாட்டார் என்பதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement
IND vs AUS, 4th Test: Steve Smith Likely To Lead Australia In The Ahmedabad Test
IND vs AUS, 4th Test: Steve Smith Likely To Lead Australia In The Ahmedabad Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 05, 2023 • 03:10 PM

இந்தியவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வசிக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 05, 2023 • 03:10 PM

இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவரது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்றிருப்பதாக தகவல்கள் கூறப்பட்டன. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் அவரால் வர முடியவில்லை. அணியில் இருந்த சீனியர் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். 

Trending

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில துவங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்குள் பாட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு திரும்ப முடியாது என்றும் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருப்பார் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.

“பாட் கம்மின்ஸ் தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது உடல்நிலை சற்று மோசமான நிலையில் இருக்கிறது.” என்று ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தரப்பினர், பாட் கம்மின்ஸ் அணுகுமுறை இந்தியாவில் எடுபடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் இந்திய மைதானங்களை பற்றி நான்கு உணர்ந்திருக்கிறார். அவர் கேப்டன் பொறுப்பில் அணியின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. ஆகையால் பாட் கம்மின்ஸை நேரடியாக ஒருநாள் வந்து பங்கேற்கும்படி ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கூறியிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement