
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது . இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 480 களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே.எஸ் பரத் ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்தார் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல். இவர் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி வேகமான ரன் குவிப்பிலும் ஈடுபட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28ஆவது சதத்தை பதிவு செய்தார் . சர்வதேச போட்டிகளில் அவர் அடிக்கும் 75 ஆவது சதம் இதுவாகும்.
இந்த ஜோடியின் வேகமான ரன் குவிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடந்து சென்றது . சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் இந்தத் தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார். அதன்பின் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்ஸர் படேல் 79 ரன்களில் அவுட் ஆனார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.