
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாடி வருகிறது.
தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அபாரமாக விளையாடி வந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 புள்ளி 3ஆவது ஓவரில் எல்லாம் 50 ரன்கள் கடந்தது. இதில் விராட் கோலி இரண்டு ரன்கள் எடுத்த உடனே மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார்.
அதாவது உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், தற்போது விராட் கோலி முறியடித்திருக்கிறார். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 46 போட்டிகளில் விளையாடி 1743 முதல் அடித்து இருந்தார். தற்போது அதனை விராட் கோலி முறியடித்து 37 போட்டிகளில் எல்லாம் அந்த ரன்களைக் கடந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.