
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 170 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 46 ரன்களையும், துவக்க வீரரான ரோஹித் சர்மா 31 ரன்களையும் குவித்து அசத்தினார்.
பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 49 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.