IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ENG vs IND Test Series: தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பி இருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாளைய தினம் மீண்டும் இங்கிலாந்து திரும்பி இந்திய அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது.
அத்துடன் அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருடன் குல்தீப் யதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பி இருந்தார். மேலும் அவரின் தயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்தியா மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிக்கு முன் அவர் நாடு திரும்பியாதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அவர் இத்தொடருக்கு முன் இந்திய அணியுடன் இணைவாரா என்ற சந்தேகங்களும் எழுந்தன.
இதுதவிர்த்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேசிய் கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சி போட்டியின் போது இந்திய அணியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால். ஒருவேளை கம்பீர் மீண்டு இந்திய அணியுடன் இணைய மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகின. ஏனெனில் கடந்த ஜிம்பாப்வே தொடரின் போது கூட விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியின் பயிற்சியாள்ராக செயல்பட்டிருந்தார் என்பதால் இந்த சந்தேகங்கள் அதிகரித்திருந்தது.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் நாளைய தினம் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி இன்றைய தினம் லீட்ஸ் சென்றடைந்துள்ள நிலையில், நாளை கௌதம் கம்பீரும் இந்திய அணியுடன் இணைவார் என்று கூற்ப்படுகிறது. மேற்கொண்டு டெஸ்ட் தொடருக்கான திட்டங்கள் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர் என்று கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now