
Ind vs Eng: Kohli and boys get into groove ahead of Test series (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையில் நாளை மறுநாள் டர்ஹாமில் கவுண்டி லெவன் அணியுடன் இந்திய அணி மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் ஈடுபடவுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் டர்ஹாம் சென்றடைந்த இந்திய அணி, இன்று வலைபயிற்சில் ஈடுபட்டு வருகிறது. இதில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, கே.எல். ராகுல், அஸ்வின், சிராஜ், ஷமி ஆகியோர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.