IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-lg1-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
Trending
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி விலகியுள்ளார். மேலும், விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது என குறிப்பிட்டிருந்தது.
மேலும் அவருக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கமால் இருந்ததால் அந்த இடத்தில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் விராட் கோலிக்கு மாற்றாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி 151 ரன்களை விளாசியிருந்தார். இதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Rajat Patidar Replaces Virat Kohli For The First Two Games #CricketTwitter #INDvENG #India #TeamIndia #ViratKohli pic.twitter.com/IdfSCMAwo9
— CRICKETNMORE (@cricketnmore) January 23, 2024
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜத் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான்.
Win Big, Make Your Cricket Tales Now