
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் ஹைதராபாத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்களை குவித்து அசத்தினார். கேப்டன் ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹார்திக் பாண்டியா 28 ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது.
இதையடுத்து, இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 40 ரன்களை எடுத்தார். ஆலனை தவிர கான்வே 10, ஹென்ட்ரி நிகோலஸ் 18, டேரில் மிட்செல் 9 போன்ற முதல் வரிசை பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உட்பட 140 ரன்களை குவித்து அசத்தினார்.