Advertisement
Advertisement
Advertisement

IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது.

Advertisement
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 02, 2024 • 01:33 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 02, 2024 • 01:33 PM

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Trending

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பந்த் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடங்கியது. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அரைசதங்களை பதிவுசெய்ததுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரிஷப் பந்த் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். மேற்கொண்டு சதத்தை நெருங்கிய ஷுப்மன் கில்லும் 90 ரன்களை சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement