Advertisement

சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!

உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார்.

Advertisement
 IND vs NZ: Former India Selector Sunil Joshi Selects Kuldeep Yadav Over Yuzvendra Chahal In His Ind
IND vs NZ: Former India Selector Sunil Joshi Selects Kuldeep Yadav Over Yuzvendra Chahal In His Ind (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 01, 2023 • 11:57 AM

குல்தீப் யாதவ் வங்கதேசத்தில் டிசம்பரில் நடந்த தொடரில் அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களுடன் அதைத் தொடர்ந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 01, 2023 • 11:57 AM

மேலும் அடுத்த வாரம் நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவை டெஸ்ட் போட்டிகளில் வைத்துக் கொள்ள வேண்டும். பிட்ச், மைதானம், ஊர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குல்தீப் எப்படி வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் அவர் ஆடிய டெஸ்ட், ஒருநாள், போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் விதங்களைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டமிழந்தவர்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் கேட்ச் ஆகி அவுட் ஆகின்றனர். அல்லது போல்டு, எல்.பி.டபிள்யூ என்று வீழ்த்துகிறார். இது பெரிய விஷயம்.

சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement