IND vs SA: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் சேர்ப்பு!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் 16ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தாண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பிரதான சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 22ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெறும்.
Trending
இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.
குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வின்னர், குரூப் பி ரன்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா, முதுகு வலி பிரச்சினை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே, ஜடேஜாவும் விலகியிருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சு துறை பலவீனமாக இருக்கும் நிலையில், இப்படி இரண்டு முக்கிய பௌலர்கள் இல்லாததால், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி படுமோசமாக சொதப்பும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் பும்ராவுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது சிராஜை அணியில் சேர்த்துள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now