Advertisement
Advertisement
Advertisement

அதிவேக பந்துவீச்சால் சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசுரவேகத்தில் பந்துவீசிய உம்ரன் மாலிக், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 11, 2023 • 11:54 AM
IND Vs SL, 1st ODI: Umran Clocks 156kph, Betters Own Record To Become Fastest Indian Bowler
IND Vs SL, 1st ODI: Umran Clocks 156kph, Betters Own Record To Become Fastest Indian Bowler (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 113 ரன்களும், ரோஹித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 373 ரன்கள் குவித்தது.

Trending


இதன்பின் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பதும் நிஷான்கா 72 ரன்களும், இறுதி வரை தன்னால் முடிந்தவரை போராடிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா 108 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்தநிலையில், இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய உம்ரன் மாலிக், இந்த போட்டியின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த போட்டியின் 14ஆவது ஓவரின் ஒரு பந்தை 156 கி.மீ வேகத்தில் வீசிய உம்ரன் மாலிக், இதன் மூலம் அதிகவேகத்தில் பந்துவீசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தனது பழைய சாதனையே தானே முறியடித்துள்ளார். 

முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் உம்ரன் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசியிருந்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இதனை உம்ரன் மாலிக்கே முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் என அனைத்திலும், உம்ரன் மாலிக்கின் பெயரே அதிகவேகத்தில் பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement