IND vs SL, Asia Cup 2023 Final : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்தது. மெத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் முன்னேறின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இரண்டு ஆசிய ஜாம்பவான்களான இந்தியா - இலங்கை அணிகள் வரலாற்றில் ஒன்பதாவது முறையாக நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- இடம் - ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
- நேரம் - மாலை 3 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 5 மாற்றங்களை செய்தது. இதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றைய போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மீண்டும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த ஐவரும் உள்ளே நுழையும் போது, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வெளியேறுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொழும்பு ஆடுகளங்கள் சாதகமாக இருப்பதால், ஷர்துல் தாக்கூரை இந்தியா விலக்கி, காயம் அடைந்த அக்சர் படேலுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
அதேசமயம் தசுன் ஷன்கா தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து 12ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதேசமயம் இலங்கை அணியின் நட்சத்திர மாயாஜால பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனா காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியின் பேட்டிங்கில் குசால் பெரேரா, பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனகா ஆகியோர் இருப்பதால் நிச்சயம் அது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தீக்ஷனா இல்லாத நிலையில், லெக் ஸ்பின்னர் துஷான் ஹேமந்த இலங்கை அணியில் இணைந்து பலம் சேர்க்கலாம். அவருடன் மதிஷா பதிரானா, துனித் வெல்லாலகே இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மொத்தம் – 166
- இந்தியா - 97
- இலங்கை - 57
- முடிவில்லை - 11
- டை - 01
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
இலங்கை: பாதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதிர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தசுன் ஷனகா (கே), தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லகே, பிரேமோத் மதுஷன், மதிஷா பத்திரனா, கசுன் ராஜிதா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - கேஎல்ராகுல், குசல் மெண்டிஸ்
- பேட்ஸ்மேன்கள்- ஷுப்மன் கில், விராட் கோலி, சரித் அசலங்கா
- ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, துனித் வெள்ளலகே (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ் (கேப்டன்), மதிஷா பதிரனா
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now