Advertisement

IND vs SL: ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் - ஹர்ஷா போக்லே!

இந்திய டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement
IND vs SL: It was on the cards, says Harsha Bhogle reacting to Rishabh Pant’s omission from T20I squ
IND vs SL: It was on the cards, says Harsha Bhogle reacting to Rishabh Pant’s omission from T20I squ (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 28, 2022 • 09:11 AM

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 28, 2022 • 09:11 AM

இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Trending

அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். வங்காளதேச தொடரில் மோசமாக விளையாடிய் 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இரு அணியிலும் ரிஷப் பந்த் அணியில் இடன் பெறவில்லை. இது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

 “எனவே, டி20யில் இடம் பிடிப்பதற்கான வரிசையில் இப்போது ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அது ஏற்கனவே அட்டைகளில் இருந்தது தான். இஷான், ருதுராஜ், சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அற்புதமான டாப் 4. 

 

ரஜத் படிதார் கடைசி பேட்டிங் இடத்திற்கு ஹூடா மற்றும் திரிபாதியுடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த டி20 அணி எப்படி செல்கிறது என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக உள்ளது. இது மிகவும் உற்சாகமான அணி மற்றும் 2024 அணியின் மையமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement