
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்றது. இந்த நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற 8 போட்டியில் 5 முறை பேட்டிங் செய்த அணிகள் ஆல் அவுட் ஆனது.
மேலும் இந்திய அணி 3 சுழற்பந்தவீச்சாளர்களை வைத்து கொண்டு விளையாடுவதால், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் போல் 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா களமிறங்கியது.
பந்தின் பவுன்ஸ் குறைவாக இருந்தது. எனினும் பேட்டிங்கிற்கு எந்த நெருக்கடியும் இல்லை. இதன் காரணமாக, ரோகித், சுப்மான் ஜோடி முதலில் பொறுமையாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து சுப்மான் கில், ரோகித் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ரன்கள் வேகமாக உயர்ந்தது.