
IND vs WI 2nd T20I: Virat, Rishabh's fifty helps India post a total on 186/5 (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஈடன் கார்டன்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷான் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 19 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவும் 8 ரன்களில் ரோஸ்டன் சேஸிடம் விக்கெட்டை இழந்தார்.