
IND vs WI, 3rd ODI: India beat West Indies by 96 runs and win the series 3-0 (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களையும், ரிஷப் பந்த் 56 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.