இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; கருண், ஷர்தூல், இஷானுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இந்திய சீனியர் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி ஜூன் 13 முதல் 16ஆம் தேதி வரை விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்த அணியில் துணைக்கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், ஷர்தூல் தாக்கூர், இஷான் கிஷனுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Note: Shubman Gill and Sai Sudharsan will join the squad before Match 2#INDvENG #ENGvsIND pic.twitter.com/TEsImkvieF
— CRICKETNMORE (@cricketnmore) May 16, 2025இதுதவிர்த்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் ரெட்டி, ஆகாஷ் தீப், சர்ஃப்ராஸ் கான், ஹர்ஷித் ரானா மற்றும் தனுஷ் கோட்டியானும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் காரணமாக சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இத்தொட்ரின் இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணியில் இடம்பிடிப்பார்கள் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்திவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இந்திய ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (விசி) (வாரம்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (வாரம்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
Win Big, Make Your Cricket Tales Now