Advertisement

ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 18, 2023 • 20:24 PM
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், இரு அணிகளும் மொத்தமாக 3 முறை மோதுவதற்கான சூழல் அமைந்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் இலங்கையிலேயே முகாமிட்டு, ஆசியக் கோப்பைக்காக தயாராகி வருகின்றனர். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மண் உள்ளிட்டோர் கண்காணிப்பில் நடக்கவுள்ள பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending


இத்தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2ஆம் தேதி பல்லகெலேயில் சந்திக்கிறது. இந்த தொடருக்கு இந்தியா இன்னும் அணியை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். காயத்திலிருந்து மீண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆசிய கோப்பை போட்டிக்கு அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் முதுகு காயத்தில் இருந்து குணமடைந்து அயர்லாந்து தொடரில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறலாம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement