
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முத்ல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை உள்டக்கி உருவாக்கப்பட்ட அணியை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த அணியின் தொடக்க வீராங்கனையாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியின் கெப்டனாகவும் அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.