பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக இந்திய மகளிர் அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தரபபில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இராண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தியதுடன், 110 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்து தஹ்லியா மெக்ராத் 56 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 50 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதுடன் 105 ரன்னில் விக்கெட்டை இழழக்க, அவரைத்தொடர்ந்த் ஹர்லீன் தியோல் 39 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் இந்தியா மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக இந்திய மகளிர் அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தரபபில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இதுகுறித்து ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக எழுப்பட்ட குற்றத்தை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையையும் அவர் ஏற்கொண்டதன் காரணமாக, மேற்கொண்டு எந்த விசாரணைக்கும் அவர் ஆஜராக தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ள நிலையில், தற்சமயம் ஐசிசியின் அபராதம் ரசிகர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now