
உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பரம எதிரிகளாக இருக்கக்கூடிய அணிகள். இரண்டு அணிகளும் யாருக்கு எதிராக விளையாடினாலும், மறந்தும் கூட இரண்டு நாட்டு ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தர மாட்டார்கள். கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தக்கூடிய விஷயத்தில் இப்படியான வரலாற்று காரணங்களும் இருக்கிறது. இது கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. நிச்சயமாக இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எந்த விதமான ஆதரவும் கிடைக்காது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சாதனை வேகப்பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும், இந்தியா உலகக் கோப்பையை வெல்வது எதிர்கால தலைமுறைக்கு நல்லது என்றும் தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா உலகக் கோப்பையை வெல்வது என்பது பிரேசில் கால்பந்தில் உலகக் கோப்பையை வெல்வது போல ஆகும். அதில் ஒரு மேஜிக் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவை இந்தியா அகமதாபாத்தில் வீழ்த்தினால், அது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லதான ஒன்றாக அமையும். ஏனென்றால் அது எதிர்கால தலைமுறைக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.