
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அழிக்குகூடிய ஒன்றகாக ஐபிஎல் தொடரில் கலக்கிவரும் அஜிங்கியா ரஹானேவுக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேசமயம் கேஎஸ் பரத், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், உனாத் கட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கபடவில்லை.