
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, வருகிற ஆகஸ்ட் மாதம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்ம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கவாஸ்கர் “ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் மழை இருக்காது. நன்றாகவே வெயில் அடிக்கும். அதனால் ஆடுகளத்தில் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்து இருக்கும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சனும், பிராடும் கூட விக்கெட் எடுக்க சிரமப்படுவார்கள். அதனால் இங்கிலாந்துடனான டெஸ்ட் குறித்து கவலைப்பட தேவையில்லை.