Advertisement

விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!

விராட் கோலி போன்ற சிறந்த வீரர் நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவிடுவார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
India need Virat Kohli’s experience at T20 World Cup, hopefully he will regain his form: Ajit Agarka
India need Virat Kohli’s experience at T20 World Cup, hopefully he will regain his form: Ajit Agarka (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 24, 2022 • 03:53 PM

கடந்த இரண்டு வருடமாகவே மோசமான பார்மால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி எந்த ஒரு போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 24, 2022 • 03:53 PM

அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார். அதற்கடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார். என்று அவர் மீது வைத்த நம்பிக்கை எல்லாம் வீணடிக்கும் வகையில் இவருடைய பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இதே நிலைமைதான் அரங்கேரியது.

Trending

இதன் காரணமாக இவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரில் இந்திய அணி நீக்கியுள்ளது. இந்த தொடரில் மட்டுமில்லாமல் உலகக் கோப்பை தொடரிலும் இவரை நீக்க வேண்டும் என்று விராட் கோலி அருமை தெரியாத பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஒருசிலரோ விராட் கோலி எப்படிப்பட்ட வீரர் என்பதையும் அவரை தேவையில்லாமல் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை விரிவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அஜித் அகார்கர்,“விராட் கோலி தற்போதைய சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்,நிச்சயம் விராட் கோலி ரன்களை அடிப்பதற்கான திறமை படைத்தவர். விராட் கோலி தற்பொழுது நெருக்கடியான நிலையில் உள்ளார் எந்த ஒரு சிறந்த வீரரும் இதுபோன்ற நெருக்கடியை சந்தித்து தான் தீர்வார்கள், நிச்சயம் விராட் கோலி இதிலிருந்து மீண்டு வந்து அடுத்த வருடம் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படுவார். 

உலகக் கோப்பை தொடருக்கு முன் விராட் கோலி இந்த சிக்கலை சமாளிப்பதற்கு போதுமான நேரம் உள்ளது, விராட் கோலி போன்ற ஒரு புத்திசாலியான வீரர் இதில் நீண்ட காலம் சிக்கியிருக்க மாட்டார், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி, பின் அதில் தடுமாறி விட்டார். விராட் கோலி தற்பொழுது நல்ல பார்மில் இல்லை என்பது தெரிகிறது. 

அனைவரும் அவருடைய பார்ம் குறித்து கவலைப்படுகின்றனர். நிச்சயம் சிறந்த வீரர் இதிலிருந்து மீண்டு வருவார் இதுபோன்ற நிலைமை இனிமேலும் நீடிக்காது” என்று விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement